Up Country

பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்த துப்பாக்கிகள் மாயம்! விசாரணை வேட்டை ஆரம்பம்!

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன என்று பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்தார்.

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும்

குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை பொலிஸ் உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது 2 கைதுப்பாக்கிகளை எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading