Local

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!

அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில், நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்களின் மூலம் ஆராயப்பட்டு வருதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இதேநேரம், அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதோடு, இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 011 2335792 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இவ்வாறானவர்கள் தொடர்பில் அறிவிக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading