World

நவீன தொட்டில்களில் படுத்துறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் மரணம்!

அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பி‌ஷர் பிரைஸ் நிறுவனம், குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகின்றது.

‘ராக் என் பிளே சிலீப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்ற இந்த நவீன தொட்டில்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.

இதற்குக் காரணம், 2009ஆம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல், அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) விசாரணை நடத்தியது.

பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள், அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது, திரும்பிப்படுக்க முயன்று இறந்து விட்டதை தாங்கள் அறிந்திருப்பதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையமே ஒப்புக்கொண்டது.

இதையடுத்து சந்தையில் உள்ள 50 இலட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

இதை பி‌ஷர் பிரைஸ் நிறுவனத்தின் தலைவர் மேட்டல் உண்மைதான் என உறுதி செய்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading