4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை!
4 வயதில் வருமான வரி கட்டிய தமிழ் பட நடிகை என்ற பட்டத்துக்கு சொந்தக்காரியும், கமலின் தேசிய விருது சாதனையை முறியடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றாலும், தற்போது சினிமாவில் இருந்தே விலகி இருக்கும் அந்த ஒரு பிரபலம் யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் முதல் தேசிய விருது வாங்கும்போது அவருக்கு வயது 6. அவரின் இந்த சாதனையை முறியடித்து 4 வயதில் தேசிய விருது வென்றவர் தான் தான் பேபி ஷாமிலி. சிறிய வயதில் வருமான வரி கட்டிய நடிகை என்ற பெருமையும் இவருக்கே உரித்தானது.

நடிகை ஷாமிலி
1989ம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ராஜநடை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது, இவருக்கு வெறும் இரண்டு வயதே தான் என்றாலும் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல், சிரிப்பது, அழுவது, மழலை மொழியில் வசனம் பேசுவது என அனைவரையும் வியக்க வைத்தவர்.

அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தனது 3வது வயதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்கள், தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படம் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது.
குறிப்பாக தமிழில் ‘அஞ்சலி’ படத்தில் நடித்ததற்காக ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு பின் பேபி ஷாமிலி என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார்.

இதன்காரணமாக மிகவும் சிறிய வயதில் வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையும் ஷாமிலிக்கு கிடைத்தது. இவர் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையாக 45 படங்கள் நடித்த ஷாமிலி, அதனை தொடர்ந்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்று படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
இப்போ என்ன செய்கின்றார்?
அதனை தொடர்ந்து, ஹீரோயினாக 2009ம் ஆண்டு தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்தார். பின்னர், 2016-ல் வீர சிவாஜி என்கிற தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்தார்.
2018ல் அம்மாமகரில்லு என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவர் இறுதியாக நடித்த திரைப்படம்.

இதன்பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இதுவரை எந்தப் படத்திலும் ஷாமிலி நடிக்கவில்லை. நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்ட ஷாமிலி இப்போது கண்ணாடி ஓவிய கலைஞராக இருந்து வருகிறார் என்பதும் இதற்காக புளோரன்சில் உள்ள அகாடெமியா ரியாசியில் ஷாமிலி பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.