LocalNorth

வவுனியாவில் கழிவுக்குழிக்குள் விழுந்து 4 பேர் பரிதாப மரணம்!

வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தில் கழிவுக்குழிக்குள் விழுந்து நான்கு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த நால்வரும் துப்புரவுப் பணிகளுக்காக இங்கு சென்றிருந்தனர் எனவும், எனினும் எதிர்பாராதவாறு ஒருவர் குழிக்குள் விழுந்த வேளையில், அவரைக் காப்பாற்ற முயன்ற ஏனைய மூவரும் குழிக்குள் விழுந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் கூறினர்.

உயிரிழந்தவர்களின் உறவுகள் வவுனியா பொது வைத்தியசாலையில் திரண்டு கதறியழுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading