Local

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் சிலாபத்தில் விபத்தில் சிக்கினர்!! – படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு

ஆனமடுவ – சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஐவருள் இருவர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கனடாவிலிருந்து வருகை தந்த தமது உறவினரொருவரை வரவேற்பதற்காக, இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading