53 பந்துகளில் 204 ஓட்டங்கள்! உலக சாதனைப் படைத்த வீரர்!!
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ண (Asia Cup Rising Stars 2026) போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிராகக் களமிறங்கிய 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), வெறும் 53 பந்துகளில் 204 ஓட்டங்கள் குவித்து List A கிரிக்கெட் வரலாற்றில் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்த அதிரடி இன்னிங்ஸில் அவர் 28 சிக்ஸர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசி, மொத்தமுள்ள 204 ஓட்டங்களில் 196 ஓட்டங்களை எல்லைக்கோடுகளின் மூலமே பெற்றுள்ளார். மேலும், List A கிரிக்கெட்டில் அதிவேகச் சதம் (28 பந்துகள்), அதிவேக 150 ஓட்டங்கள் (40 பந்துகள்), அதிவேக இரட்டைச் சதம் (52 பந்துகள்) மற்றும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (28 சிக்ஸர்கள்) ஆகிய சாதனைகளைப் படைத்து, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment.