Local

சொந்த மண்ணில் காலடிவைக்கும் 54 ஈழ அகதிகள்!

தமிழகத்திலிருந்து 54 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று செவ்வாய்க்கிழமையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதரகத்தின் உதவியுடன் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

விசேட விமான சேவைகளின் ஊடாக இந்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்புகின்றவர்கள் யாழ்ப் பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை அவர்களது மாவட்டங்களிலேயே மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading