World

6 மணி நேர தூக்கத்துக்கு போனஸ் ரூபா. 42000

6 மணி நேர தூக்கத்துக்கு போனஸ் ரூபா. 42000

வாரத்திற்கு 5 நாட்கள், இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் கிரேசி இண்டெர்நேஷனல். திருமணங்களை நடத்தி வைக்கும் இந் நிறுவனம் தனது ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்கினால், போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆப் மூலம் ஊழியர்களின் தூக்கம் கணக்கிடப்படுகிறது. அதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவன அதிகாரி தெரிவித்ததாவது:
20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களில் 92 சதவீதம் பேர் இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading