Local

60 வயதுக்கு மேற்பட்டோர் லெபனானுக்கு பணிக்குச் செல்ல வாய்ப்பு!


லெபனானில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

லெபனானில் கொவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் லெபனானுக்கு வேலைக்குச் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

கொவிட் வைரஸ் பரவல் லெபனானில் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்குத் திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் இவ்வாய்ப்பைப் பெறவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading