Local

கை – மொட்டு கூட்டணி அமைப்பது குறித்து 6ஆம் சுற்றுப் பேச்சு நாளை!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 6ஆம் சுற்றுப் பேச்சு நாளை புதன்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையிலான 6ஆம் சுற்று கலந்துரையாடல் கடந்த 17 ஆம் திகதியே நடைபெற இருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரால் விடுக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு பிற்போடப்பட்ட சந்திப்பே நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான 5ஆம் சுற்றுப் பேச்சு இம்மாதம் 7ஆம் திகதி நடைபெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading