Lead NewsLocal

மைத்திரியும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்!

“பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்படவுள்ளார்.”

– இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டம், ஒழுங்குகள் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை சாட்சியம் வழங்க அழைக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியையும் அழைப்பது குறித்து ஆராயப்படுகின்றது” – என்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஏற்கனவே சாட்சியம் வழங்கியவர்களில் பலர் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading