LocalWorld

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க மனிதச் சங்கிலிப் போர்! – அற்புதம்மாள் அறிவிப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்தவகையில், மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதனை வலியுறுத்தி மக்களைச் சந்திக்க முடிவெடுத்து இதுவரை 18 மாவட்டங்களில் மக்களைச் சந்தித்துள்ளேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading