Local

கொழும்பு – ஐந்துலாம்புச் சந்தியில் 7 ஓட்டோக்களுடன் லொறி மோதியதில் 7 பேர் காயம்!

கொழும்பு – ஐந்துலாம்புச் சந்தியில் லொறி ஒன்று 7 ஓட்டோக்களுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோக்கள் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள மக்கள் லொறி பயணித்த வீதியில் தடைகளை ஏற்படுத்தி லொறியை நிறுத்தியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading