Entertainment

79ஆவது வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்!

பிரபல அமெரிக்க நடிகர் ராபர்ட் டி நிரோவின் ஏழாவது குழந்தை பொதுவெளியில் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

மூத்த நடிகர் ராபர்ட் டி நிரோ
ஹாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான ராபர்ட் டி நிரோ, 1965ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். பல படங்களை தயாரித்துள்ள இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தனது 79வது வயதில் தந்தையாகியுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் கூறி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ராபர்ட் டி நிரோ. இந்த நிலையில் அவரது காதலி டிஃப்பானி சென் (45) குழந்தையை வெளியில் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

ஏழாவது குழந்தை

இது ராபர்ட் டி நிரோவுக்கு 7வது குழந்தை ஆகும். முன்னதாக, ஆறு குழந்தைகளின் தந்தையாக இருப்பது எப்படி என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த நிரோ, தனக்கு ஆறு குழந்தைகள் இல்லை, மாறாக ஏழு குழந்தைகள் இருப்பதாக கூறி அதிர வைத்தார். ஆனால் அவர் அப்போது குழந்தையின் பெயரையோ அல்லது பாலினத்தையோ பகிர்ந்து கொள்ளவில்லை.

ராபர்ட் டி நிரோவுக்கு முதல் மனைவி Diahnne Abbott மூலம் Drena (51), Raphael (46) என்ற பிள்ளைகளும், கிரேஸ் மூலம் Elliot (25), Helen (11) என்ற இரு பிள்ளைகளும், Toukie Smith மூலம் இரட்டையரான ஆரோன், ஜூலியன் (27) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

காட்ஃபாதர் இரண்டாம் பாகத்திற்காக சிறந்த துணை நடிகர் அகாடமி விருதை வென்ற நிரோ, ராகிங் புல் படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading