90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்
tokyo man won rs.12 lakhs by 90 minutes sleep in competition: ஜப்பானில் நடைபெற்ற 90 நிமிட தூக்க போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளார்.
ஜப்பான், பொதுவாக நீண்ட வேலை நேரம், நீண்ட பயண நேரம் மற்றும் பரபரப்பான இரவு நேரப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட நாடாக உள்ளதால் அந்த நாட்டு மக்கள் குறைந்த நேரமே தூங்குவதாக கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் ஜப்பானிய மக்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 7 மணி நேரம் 24 நிமிடங்கள் மட்டுமே தூக்கியுள்ளனர் என்றும், இது குழுவில் உள்ள அனைத்து OECD நாடுகளிலும் மிகக் குறைவானதாகும் என்றும் OECD தரவுகள் தெரிவித்தது.
இந்நிலையில், ஜப்பானில் தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மெத்தை நிறுவனமான கோலா ஸ்லீப் ஜப்பான் அமைப்பு தூங்கும் போட்டியை ஏற்பாடு செய்தது.

இதில், மங்கலான வெளிச்சம் கொண்ட ஓர் அறைக்குள், டசன் கணக்கான பங்கேற்பாளர்கள் தங்கள் தலைகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்திக்கொண்டு மெத்தைகளில் உறங்கினர்.
அவர்களின் தலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகள், அவர்கள் எவ்வளவு விரைவாகத் தூங்கினார்கள் என்பதையும், அந்தத் தூக்கம் எவ்வளவு ஆழ்ந்தது என்பதை கண்காணித்தன.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி என்ற பங்கேற்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2 மில்லியன் ஜப்பான் யென்(இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) பரிசு வென்றார்.
இந்த பணத்தை வீடு மாறும் செலவுகளுக்கும், ஒரு புதிய படுக்கை வாங்குவதற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சுய்மி தெரிவித்தார்.

You must be logged in to post a comment.