Local

பொலிஸ் அதிரடி வேட்டை! 941 பேர் வசமாக சிக்கினர்!!

கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 941 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டிலிலேயே குறித்த 941 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த 941 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த தினத்துக்குள் வீதி விதிமுறை மீறல் தொடர்பாக 29,461 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading