World

பாண் திருடியதால் பதவியை இழந்த எம்.பி.!

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.

ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன்,

அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய தர்ஜ் கிரஜ்க்சிச் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

“நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பணம் செலுத்துவதற்காக பொறுத்திருந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ள 54 வயதாகும் தர்ஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading