World

பாகிஸ்தானுடனான உறவை முறித்துக்கொண்டது இந்தியா!

தீவிரவாத தாக்குதலால் பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இந்திய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்.
தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் கோரிக்கை வைக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா. இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும்.” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading