Local

44 நாடுகளில் கடற்படைகள் பாகிஸ்தானில் கூட்டு பயிற்சி! இலங்கையும் பங்கேற்பு!!

பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சயுரால என்ற இலங்கை கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

28 அதிகாரிகள், 142 மாலுமிகள் என மொத்தம், 170 இலங்கை கடற்படையினருடன் சென்றுள்ள இந்தக் கப்பல், வரும் 6ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.

கராச்சியில் அமான்-2019 கூட்டு கடற்பயிற்சி வரும் 8ஆம் திகதி தொடக்கம், 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் அவுஸ்ரேலியா, கனடா, சீனா, ஜேர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கட்டார்,

ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளின் கடற்படைகளின், பெரும் எண்ணிக்கையான போர்க்கப்பல்களும், விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading