Local

மலையக இளைஞர்களின் போராட்டம் குறித்து சபையில் அநுர உரை- (VIDEO) இணைப்பு

புதிய அரசின் இடைக்கால கணக்கறிக்கையை ஜே.வி.பி. கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அது அரசியல் நோக்கில் தயாரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய அரசின் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதுதொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின்  தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், இடைக்கால கணக்கறிக்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையும் உள்வாங்கப்படவில்லை எனவும் சாடினார்.

” அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அல்லது சமுர்த்தி வழங்க என அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் இந்த கணக்கு அறிக்கை ஒதுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஆதரவு வழங்கியிருப்போம்.

ஆனால், இதில் அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கான பாரிய நிதித் தொகையொன்று உள்வாங்கப்பட்டிருந்தது. அரச தேவையைக் காட்டி அரசாங்கத்தின் அரசியல் தேவைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே இடைக்கால கணக்கு அறிக்கை காணப்பட்டது. அரசமைப்பை அப்பட்டமாகமீறிய ஜனாதிபதிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றும் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading