Local

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன இருவரும் இன்று பிணையில் விடுதலை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பொதுமுகாமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவரும் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளுப்பிட்டி, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading