Lead NewsLocalNorth

கேப்பாப்பிலவில் கவிழ்ந்தது இராணுவத்தின் கப் வாகனம்! – சிப்பாய் ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 8 சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவரே பலியாகினார். அதில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

படுகாயமடைந்த இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading