Local

அங்கொட லொக்காவின் சகாவான ‘கடுவெல பபி’ கைது! அதிரடிப்படையின் கைது வேட்டை தொடர்கிறது!!

டுபாயில் சிறைவைக்கப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் சகாவான ‘கடுவெல பபி’ என்றழைக்கப்படும் இசுறு சமிந்த சமரதுங்க, விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடுவெல – பிட்டுகல பகுதியில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரராக செயற்பட்ட இவர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 600 கிராம் ஹெரொயின் மற்றும் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சட்டவிரோதபோதைப்பொருளை இல்லாதொழித்து, பாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுவதில் ஜனாதிபதியும், பிரதமரும் குறியாக இருக்கின்றனர். விசேட அதிரடிப்படைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்துள்ள ஒரு மாதத்தில் மாத்திரம் பல கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், முக்கிய சூத்திரதாரிகள் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading