Local

புத்தாண்டு சுபநேர சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘தமிழ், சிங்களப் புத்தாண்டு சுபநேர சீட்டை’ ஜனாதிபதியிடம் சம்பிரதாயபூர்வமாக  கையளிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய சீட்டு,  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம்  கையளிக்கப்பட்டது.

புதுவருடப் பிறப்பு புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading