Local

சண்.குகவரதனுக்குப் பிணை!

நிதி மோசடி தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட குகவரதனும் அவரது மனைவியும் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை, தலா 25 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும், 2 சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதிவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டார்.

குறித்த இருவரினதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading