Lead NewsWorld

இந்தியாவில் மீண்டும் பா.ஜ.கவின் அரசாட்சி!

இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப் பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தமையை அடுத்து, தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின.

இந்திய நாடாளுமன்றத்தின் 543 ஆசனங்களில் 306 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் தகைமையைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகின்றது.

காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் என்றும், மற்றக் கட்சிகள் 104 இடங்களில் வெற்றி பெறுவர் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இதேவேளை, தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் 34இல் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டமைப்பு வெல்லும் என்றும், நான்கு இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குக் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading