பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
ஹொரண வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
புளத்சிங்கள, கோவிந்த பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

