Local

‘கழுத்தறுப்பு’ பிரிகேடியரால் லண்டனுடன் கொழும்பு மோதல்!

லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என பிரிட்டன் வெளிவிவகாரப் பணியகத்திடம் இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தல்பஹேவ, இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில்,

“பிரிகேடியர் பெர்னாண்டோ அப்போது இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்தார். எனவே, அவருக்கு இராஜந்திர விலக்குரிமையும், சிறப்புரிமைகளும் இருந்தன.

பிரிகேடியர் பிரியங்க வழக்கு ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என பிரிட்டன் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்திடம் தெரிவித்துள்ளோம்.

இந்த வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், இலங்கை அரசு, பிரிட்டன் வெளிவிவகார பணியகத்திடம் எதிர்ப்பை வெளியிட்டது.

இது தொடர்பாக, அளிக்கப்பட்ட சமர்ப்பணத்தில் பிரிகேடியர் பிரியங்க, பிரிட்டனை வதிவிடமாகக் கொண்டவரில்லை.

இராஜதந்திர தலைவராக பிரிட்டனுக்குக் கடமைப் பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே, அவருக்கு விலக்குரிமையும், முன்னுரிமைகளும் இருந்தன.

எமது இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறியிருக்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

வழக்கு விசாரிக்கப்பட முன்னரே, எமது எதிர்ப்பை சமர்ப்பித்திருந்தோம். ஆனாலும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் வெளிவிவகாரப் பணியகத்துக்கும், நீதிமன்றத்துக்கும் இடையில் உள்ளக கலந்துரையாடல் நடந்ததா என்று எமக்குத் தெரியாது. ஆனால், எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading