Local

அக்காவும் தம்பியும் வெட்டிப்படுகொலை! – வென்னப்புவவில் கொடூரம்

புத்தளம், சிலாபம் – வென்னப்புவப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சகோதரனும் சகோதரியுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய யுவதியும், அவருடைய சகோதரனான 8 வயதுடைய சிறுவனுமே கொலைசெய்யப்பட்டவர்களாவர்.

இவர்களை வெட்டிக்கொன்ற 28 வயதுடைய இளைஞர் வென்னப்புவப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், கொலையாளியின் வீட்டுத் தோட்டத்துக்கு வருவதனால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading