Lead NewsLocal

‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்! – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கி அரசைக் காப்பாற்றி வைத்திருப்பதாகக் கூறுவது உண்மையே. அதற்குக் காரணம் இருக்கின்றது.

இப்போது இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்சதான் ஆட்சிக்கு வருவார்.

ஆகவே, ரணில் அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறினால் இந்த அரசு கவிழும். அரசு கவிழ்ந்தால் மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார். நாங்கள் நடுநிலைமை வகித்தாலும் அவர் வருவார்.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவதை எமது மக்கள் விரும்புவார்களா? ஆகவே, நாங்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading