Local

‘பட்ஜட்’மீது நாளை வாக்கெடுப்பு! மைத்திரி – மஹிந்த இன்று மாலை மந்திராலோசனை!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (05) மாலை  நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ‘பட்ஜட்’டுக்கு  எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுஎதிரணியும், ஜே.வி.பியும் தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையிலான சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இன்று (04) மாலை முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்  தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றக்கட்டத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இதன்போது ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பின்போது  எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.  அத்துடன், தாம் எடுக்கவுள்ள தீர்மானத்துக்கான காரணங்களையும் மைத்திரி தரப்பு,  மஹிந்தவுக்கு தெளிவுபடுத்தவுள்ளது.

இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நடுநிலை வகித்தமை  குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading