LocalNorth

முல்லையில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை! – இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

“பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் சிறுமிமையைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். சிறுமி நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து இளைஞர்களை நாம் கைதுசெய்துள்ளோம். அவர் களை நீதிமன்றில் முற்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார்” – என்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading