LocalUp Country

ரூ. 1000 இற்கு ஆப்பு – 700 ரூபாவை ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அடிப்படை நாட்சம்பளமாக 650 அல்லது 700 ரூபாவை ஏற்பதற்கு தொழிற்சங்கங்கள் தயாராகிவருகின்றன என்றும்,

திங்கட்கிழமை ( 21) நடைபெறவுள்ள கூட்டு ஒப்பந்த பேச்சில் இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என்றும் தெரியவருகின்றது.

தற்போது அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவை பெற்றுவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அத்தொகையை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளும் தொடர்போராட்டங்கள் நடத்திவருகின்றன.

எனினும், ஆயிரம் ரூபா என்ற தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இம்முறையும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என தெரியவருகின்றது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading