Local

இலங்கையை மிரட்டுகிறது படைப்புழு – விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு விடுமுறை இரத்து!

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையால், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் தெரிவித்தார்.

” சுமார் 100 வகையான பயிர்செய்கையை படைப்புழு தாக்கக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் சோளம் உள்ளிட்ட சில துணைப் பயிர்செய்கையை படைப்புழுக்கள் அதிகளவில் தாக்கியுள்ளது.

சுமார் 45,000 ஹெக்டெயர் அளவான சோளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சோளம்சார் உணவுப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைக்கூடும். ” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading