Local

மைத்திரி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! – இன்று மாலை 6 மணிக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவை உப குழு அறிக்கை இன்று முன்வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading