Lead NewsLocal

மைத்திரியுடன் முட்டிமோதத் தயாராகிறார் ரணில்! – அமைச்சரவையைக் கூட்ட அதிரடி நடவடிக்கைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யும் வரைக்கும் அமைச்சரவையைக் கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அடுத்த வாரமும் அமைச்சரவையைக் கூட்டப்படாவிட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட பிரேரணையொன்றை முன்வைத்துவிட்டு தனக்கிருக்கும் அதிகாரங்களுடன் தற்றுணிவாக அமைச்சரவையைப் பிரதமர் ரணில் கூட்டவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அனுமதியைக் கோராமலும் பிரதமர் அமைச்சரவையை கூட்ட அதிகாரம் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஒருவர், இல்லாத அமைச்சருக்குப் பதில் அமைச்சரை ஜனாதிபதி நியமிக்கும்போது அமைச்சரவையைக் கூட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பது தவறல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading