Local

சஹ்ரானின் குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமினின் குருணாகல் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், விசேட பொலிஸ் குழுவினரால் கட்டுப்பொத்த, நாரம்மலவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

முஹமட் அரோஷ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானுடன் நெருடங்கிய தொடர்புடைய இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன என்றும், இவர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading