LocalNorth

ஆளுநர் கடமையேற்புக்கு கூட்டமைப்புக்கு அழைப்பு!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 10.01 மணிக்குப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading