Cinema

‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வழக்கு! – நாளை விசாரணை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் – கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் சர்கார் படத்தை வரவேற்று தீபாவளியுடன் கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளார் என்று வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கின்றார். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading