World

அமெ. தேர்தலில் ரஷ்ய தலையீடு: பிரபல மொடல் அழகி ரிப்கா கைது!

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய தலையீடு விவகாரத்தில், பிரபல மொடல் அழகி ரிப்கா கைது செய்யப்பட்டார்.

ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் ரஷ்ய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் நாஸ்டியா ரிப்காவும், மேலும் 3 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தனர் என்றும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாஸ்டியா ரிப்காவுக்கும், அவரோடு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ள 3 பேருக்கும் அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading