சுயேச்சையாகக் களத்தில் குதிக்க கட்டுப்பணம் செலுத்தினார் சமல்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட நிதஹஸ் பொதுஜன சங்விதானாய என்ற பெயரில் இன்று கட்டுப்பணம் செலுத்தினார் முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அவரின் சகோதரரான சமல் இந்தக் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
