Local

சந்திரிகா மீண்டும் களத்தில்; சு.கவினருடன் முக்கிய பேச்சு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் என மஹிந்த அணி திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், மைத்திரி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கின்றது.

இதனால், புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதிலும் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர், சந்திரிகா அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இவ்வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading