Lead NewsLocal

மைத்திரியைப் போட்டுத் தாக்கி சந்திரிகா அதிரடி! – புகைப்படத்தை நீக்கி ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி

அமரர் பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டனர். ஆனால், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

“பண்டாரநாயக்க கொள்கைகளை இங்குள்ள யார் பின்பற்றுகிறார்கள்? நாங்களே உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள். எங்களிடம்தான் உண்மையான கொள்கைகள் உள்ளன” என்று செய்தியாளர்களிடம் அங்கு தெரிவித்துவிட்டு புறப்பட்டார் சந்திரிகா.

இந்தக் கருத்துக்களின் ஊடாக மைத்திரியை அவர் மறைமுகமாகப் போட்டுத் தாக்கிவிட்டே சென்றார்.

இதற்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. அமரர் பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வுப் புகைப்படங்களில் சந்திரிகா நிற்கும் புகைப்படங்கள் எதனையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடவில்லை.

ஜனாதிபதி மைத்திரியும், நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் சுதந்திரக் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் நிற்கும் புகைப்படங்களை மட்டும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

எனினும், ‘லங்காதீப’ இணையத்தளம், நிகழ்வில் சந்திரிகா கலந்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading