சென்னை, கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி ஒரு தோல்வி (மும்பை அணியிடம்) கண்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றியைப் பெற்று இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் சென்னை அணி 11 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வெற்றிபெற்றுள்ளன.
