Local

பெற்றோரின் கவனமின்மையால் நீரோடையில் விழுந்து குழந்தை பரிதாப பலி!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்தெனிய பகுதியில் நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நீரோடையில் விழுந்த குழந்தை அரலகங்வில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உல்பத்வெவ, ருகுனுகம பகுதியை சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பெற்றோரின் கவனமின்மையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading