Local

கொக்கைன் வர்த்தகருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு!

கொஹூவளை பிரதேசத்தில் கொக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அந்நபருக்கு நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் செயற்பாடுகள் காரணமான, சமூகத்தில் மோசமான நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான் கிஹான் குலதுங்க, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகப்பட்ச தண்டனைகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மரணத் தண்டனையானது, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

கொஹூவளை பிரதேசத்தைச் சேர்ந்த, நலின் சாருக் குலதுங்க என்பவரே இவ்வாறு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, கொஹூவளை பிரதேசத்தில், 62.06 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளை, விற்பனைக்காக தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading