LocalSports

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்துகள்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில், இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றியடையச் செய்த குசல் ஜனித் பெரேரா மற்றும் அணிக்கு வாழ்த்க்கள் என ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதேபோல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை அணிக்கு தனது வாழ்த்தை டுவிட்டரில் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading