Lead NewsLocal

வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து தடுத்துவைத்திருப்பது முறையல்ல! – பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தது சி.ஐ.டி.

தீவிரவாதச் செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியைத் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்று பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்.

வைத்தியர் ஷாபி 1978ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9 (1) பிரிவின் கீழ் கடந்த மே மாதம் 27ஆம் திகதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் மீது தீவிரவாத விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இல்லாதபடியால் அவர் மீதான தடுப்புக்காவலை இரத்துச் செய்வதே நல்லது எனவும் பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த விடயத்தை கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading