Lead NewsLocal

தொடர்கின்றது பதற்றம்! நாடு முழுவதும் ஊரடங்கு!!

நாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைகளை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

எனினும், வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் இன்று முன்னிரவு 7.30 மணியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா, மினுவாங்கொட, கணேமுல்ல, தொம்பே, கிரிந்திவெல, மல்வத்துகிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வியாங்கொட, வீரகுல,வெலிவேரிய, பலேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading